தனுஷின் ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! – ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷின் ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! - ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படம் ‘வாத்தி’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவர நாக வம்சி மற்றும் ஃபார்ச்சூன் 4 சினிமாஸ் சார்பில் சாய் செளஜன்யா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி எழுதி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘வாத்தி’ வரும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் இது தொடர்பாக வெளியாகியுள்ள போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, நான் கடவுள் ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். அவிநாசி கொள்ளா புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்ற, வெங்கட் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Leave a Response