மலேசியாவில் ஆஹா தமிழ் ஒடிடி! – கோலாகலமான விழா மூலம் அறிமுகம்

மலேசியாவில் ஆஹா தமிழ் ஒடிடி! - கோலாகலமான விழா மூலம் அறிமுகம்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் செயல்பட்டு வரும் ஆஹா ஒடிடி தளம் இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, அதன் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து முன்னணி ஒடிடி தளமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஆஹா தமிழ் ஒடிடி தளம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் பார்க் ரோயலில் கோலாகலமான விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஆஹ தமிழ் ஒடிடி தளத்தை தொடங்கி வைத்தார். இந்திய ஆஹா குழுமத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர் உள்ளிட்ட மலேசியா மற்றும் இந்திய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிகள் கலந்துக்கொண்டார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களில், இரண்டு ஆண்டுகள் இந்திய சந்தையில் வெற்றிநடைபோடுகின்ற ஆஹா OTT தளம், இம்முறை மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்போடு கால்பதிக்கின்றது.

இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து  தரமான படைப்புகளை திறமையான பிரபலங்களின்  மூலம் தந்துக்கொண்டிருக்கின்றது. 100 % தமிழ் படைப்புக்களை வழங்கிவரும் ஆஹா தமிழ் OTT , விக்ரம், விருமன், கூகுள் குட்டப்பா,மன்மதலீலை, அகாஷிவானி, அம்மூச்சி 2 , குத்துக்கு பத்து, எமோஜி மற்றும் சர்க்கார் வித் ஜீவா போன்ற வெற்றிப்படைப்புகளை உள்ளடக்கியது.

பிரபல நடிகர் சிம்பு மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் மலேசியாவில் கால்பதிக்கவிருக்கும் ஆஹா தமிழ் OTT தளத்திற்கு விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலேசியாவில் நடந்தேறிய அனிருத் லைவ்-ன் மலேசியா 2022 கலைநிகழ்ச்சியின் OTT சேவையை உடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆஹா தளத்தின் அசாதாரண முயற்சியை பாராட்டிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், சுயபடைப்புகளை தயாரிப்பதின் மூலம் உள்ளூர் கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் பெறும், என்றும் தெரிவித்தார்.

உள்ளூர் படைப்புகளில் முதலீடு செய்து, மலேசிய தமிழ் படைப்புகள்  மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் முதல் இந்திய OTT தளமாக, ஆஹா தளம் விளங்கவிருக்கின்றது. இதன்மூலம், தெற்கிழக்காசியா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே நோக்கமாகும்.

ஆஹா நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி, அஜித் தாகூர் பேசுகையில், “ஆஹா தளத்தின் பலமாக இருப்பது, மேற்கத்திய படைப்புக்களை மட்டும் சாராமல், 100 சதவீதம் உள்ளூர் படைப்புக்களை வெளியிடுவதேயாகும். இம்முயற்சியானது, வெறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை மட்டும் தராமல், உள்ளூர் கலைஞர்களையும் நிறுவனங்களையும் ஆதரிப்பதே ஆகும்.” என்றார்.

ஆஹா தமிழின் வணிக பிரிவு தலைவர் சிதம்பரம் நடேசன் பேசுகையில், “’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றனார் வரிகளுக்கு சிறந்த உதாரணம், மலேசிய தமிழர்கள். அனைவரையும் அன்போடும் ஆதரவோடும் வரவேற்பதில் சிறந்தர்வகள். அதே வரவேற்பை ஆஹா தளத்திற்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆஹா தமிழ் OTT தளம் மூலக்கூறாக, “தமிழால்,தமிழில், தமிழருக்கு” எனும் கோட்பாடோடு தொடங்கப்பட்டது. அதே வேட்க்கையோடு மலேசியாவிலும் செயல்படும்.” என்றார்.

Leave a Response