வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நாக சைதன்யா நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்டி ஷெட்டி நடிக்கிறார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தை பவன்குமார் வழங்க உள்ளார். அபூரி ரவி இந்தப் படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்ற உள்ளார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Leave a Response